News October 23, 2024
கே.எல். ராகுலை விடுவிக்கும் LSG

ஐபிஎல்லில் லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுலின் செயல்பாடு அணியின் நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்காததால் அவரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நிக்கோலஸ் பூரான், ரவி பிஷ்னோய் ஆகியோரை மட்டும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. LSG அணிக்காக கடந்த 3 சீசன் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
Similar News
News January 25, 2026
இன்று அசைவம் சாப்பிட்டீங்களா? இதில் கவனம்

சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு சில விஷயங்களை செய்யக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக, இந்த உணவுகளை சாப்பிட்ட பின், பால், தயிர், மோர் போன்ற பால் பொருள்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது அஜீரணத்தையும், சரும அலர்ஜியையும் ஏற்படுத்தும். அதேபோல், அசைவம் சாப்பிட்டுவிட்டு டீ குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். மட்டன் சாப்பிட்டு தேன் உண்டால் வயிற்று கோளாறு ஏற்படும்.
News January 25, 2026
பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. ஊர்களுக்கு சென்றவர்கள் நெரிசலின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக TN அரசு நாளை சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கவுள்ளது. அதாவது, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 பஸ்களும், மற்ற நகரங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNSTC APP மற்றும் இணையதளத்தில் இப்போதே டிக்கெட்களை புக் செய்யுங்க!
News January 25, 2026
EPS-க்கு துரோகத்திற்கான நோபல் பரிசு: உதயநிதி

திருவொற்றியூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது EPS-க்கு தான் கொடுக்க வேண்டும் என சாடியுள்ளார். மேலும் அமித்ஷாவின் முரட்டு அடிமை EPS தான் எனவும், ஹிந்தி திணிப்பு குறித்து அவரிடம் கேட்டால், ஹிந்தியை திணித்தால் என்ன என்று கேட்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


