News September 28, 2025
கரூர் துயரம்: அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளார். விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பரப்புரைக்கு விஜய் தாமதமாக வரக் காரணம் என்ன? கூட்டநெரிசல் எதனால் ஏற்பட்டது? பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் விவரம் குறித்து கவர்னர் ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 28, 2025
CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
News September 28, 2025
தவெகவில் தன்னார்வலர்கள் இல்லையா?

மாபெரும் அரசியல் கூட்டங்களும் பேரணிகளும் தமிழக அரசியல் களத்தின் அங்கங்கள் தான். தலைவரின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரளும் பொதுமக்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பாக கூட்டம் நடைபெறவும் போலீஸுடன் இணைந்து அந்தந்த கட்சியின் தன்னார்வலர்கள் ஈடுபடுவர். இதனால் தான் இதுவரை பெரும் அசம்பாவிதங்கள் நடந்ததில்லை. இந்நிலையில், அத்தகைய தன்னார்வலர் அணி தவெகவில் இல்லையா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 28, 2025
தவெகவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி எம்.தண்டபாணி ஒப்புதல் வழங்கியுள்ளார். தவெக சார்பாக வழக்கறிஞர் அறிவழகன், நிர்மல் குமார் முறையிட்ட நிலையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் நாளை (செப்.29) பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையின் போது முக்கிய சிசிடிவி ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.