News October 6, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நீதிபதிகளை விமர்சித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் சம்பவ வழக்கில், TVK கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும், விஜய்யின் தலைமை பண்பு குறித்தும் ஐகோர்ட் நீதிபதி கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் விமர்சித்த முன்னணி நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் சசிகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News October 6, 2025
கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்

கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால், இருவரையும் இன்று இரவு அல்லது நாளைக்குள் கைது செய்ய தனிப்படை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 6, 2025
நாட்டில் பாதுகாப்பில்லாத நகரங்கள் இவை தான்

இந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை NCRB வெளியிட்டுள்ளது. 2023-ல் நடந்த குற்றங்களின் புள்ளிவிவரம் அடிப்படையில், ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்ற அடிப்படையில் இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பாதுகாப்பற்ற டாப் 9 நகரங்களை மேலே பட்டியலிட்டுள்ளோம். SWIPE செய்து பாருங்கள். இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News October 6, 2025
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து CM ஆலோசனை

தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.