News September 29, 2025
கரூர் சம்பவம்: மேலும் ஒரு வழக்கு பதிவு

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் கெளதம் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News September 29, 2025
ஆசிய கோப்பை: உணர்ச்சிமிகு தருணங்கள் PHOTOS

பாக்.,ஐ வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை 9-வது முறையாக வென்றுள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை என்பது அணியின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நீலப்படைக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், ஃபைனலின் மறக்க முடியாத தருணங்களை மேலே swipe செய்து பாருங்கள்.
News September 29, 2025
மீண்டும் துபாய் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில், CM ஸ்டாலின் உள்பட ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் அங்கு சென்றனர். அந்த வகையில், துபாய்க்கு சென்றிருந்த DCM உதயநிதி ஸ்டாலினும், தனி விமானத்தில் நேற்று காலை திருச்சி வந்து, அங்கிருந்து கரூர் சென்றார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேட்டி கொடுத்துவிட்டு, மீண்டும் தனி விமானம் மூலம் துபாய் சென்றுள்ளார்.
News September 29, 2025
நடராஜ ஆசனம் செய்வதன் நன்மைகள்!

நடராஜ ஆசனம் செய்வதற்கு முதலில் இடது காலை கீழே ஊன்றி வலது காலை பின்னோக்கி தலைக்கு நேராக தூக்க வேண்டும். பின்னர் படத்தில் உள்ளதுபோல் வலது கையால் வலது காலை பிடித்துக்கொண்டு இடது கையை சற்று மேல் நோக்கி நீட்டுங்கள். தினமும் 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்துவர உடலில் ரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீராக இருக்கும். தலை வலி, கால் பாத வலி, பசியின்மை நீங்கும். மூட்டுக்கள் பலம் பெற்று கூன் சீராகும். SHARE.