News August 18, 2024

‘கங்குவா’ vs ‘வேட்டையன்’ ஒரேநாளில் ரிலீஸ்?

image

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக ‘வேட்டையன்’ படக்குழு அறிவித்து ட்விஸ்ட் வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அது வேட்டையன் படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்றும், அக்.10இல் படம் ரிலீஸ் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சூர்யாவின் ‘கங்குவா’ படமும் அக்.10ல் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இரண்டு பெரும் படங்களும் ஒரேநாளில் மோதுமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News July 8, 2025

சொந்த வீடு வாங்க முடியுமா? ஜோதிட விளக்கம்

image

சொந்த வீடு கட்டியோ அல்லது வாங்கியோ குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இது சிலருக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். அதற்கு அவர்களது சொந்த ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருப்பது தான் காரணம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகையால் செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதமிருந்து செவ்வாய்க்கு அதிபதி ஆன முருகனை வழிபட்டு வந்தால் 9 வாரத்தில் நல்லது நடக்கும் என்கிறார்கள்.

News July 8, 2025

இந்தியாவின் ஒட்டக படை தெரியுமா?

image

ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

News July 8, 2025

Non Interlocking ரயில்வே கேட் என்றால் என்ன?

image

கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.

error: Content is protected !!