News June 27, 2024
ஜூன் 27 வரலாற்றில் இன்று!

*1838 – ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தநாள் இன்று. *1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை கனடாவைச் சேர்ந்த ஜோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
*1941 – ரொமானியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகள் ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர். *2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
Similar News
News July 11, 2025
நடிகர் கிங்காங் மகளை நேரில் வாழ்த்திய CM ஸ்டாலின்

நகைச்சுவை நடிகர் கிங்காங் என அழைக்கப்படும் சங்கர், தமிழ், மலையாளம் உட்பட 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் திருமணம் அசோக் பில்லர் பகுதியில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் தமிழிசை, ஜெயக்குமார் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
News July 11, 2025
4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்: IMD

TN-ல் இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102°F, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், குடை, தண்ணீர் பாட்டில் உடன் எடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது… இந்த 3 விஷயங்கள் அவசியம்!

வீட்டில் பூஜை செய்ய ஏதோ ஒரு தடங்கல் ஏற்படுகிறது என்றால், அது கர்மவினையே காரணம் என்கின்றனர். அதிலிருந்து விடுபட்டு, கடவுளை முழு மனதுடன் பூஜிக்க இந்த திரிகரண சுத்தி உங்களுக்கு உதவும். வீட்டில் கடவுளை வழிபடும் போது, கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை பாட, தூய எண்ணங்களோடு வழிபட வேண்டும். இடையூறுகள் இருப்பினும் மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வழிபடுங்கள். SHARE IT.