News June 27, 2024
ஜூன் 27 வரலாற்றில் இன்று!

*1838 – ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தநாள் இன்று. *1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை கனடாவைச் சேர்ந்த ஜோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
*1941 – ரொமானியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகள் ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர். *2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
Similar News
News January 9, 2026
திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

மாணிக்கம் தாகூர் X தள பதிவு, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக MLA-களின் பட்டியலை வெளியிட்டு, அரசவை கவிஞர்களும், ஐடி விங் மகான்களுக்கும் நல்ல பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கூட்டணி இல்லாமல், திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் இம்மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து வகையான பார்களை கட்டாயம் மூட வேண்டும். இந்த நாள்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 9, 2026
திமுக இல்லாத தமிழகமே மக்களின் கனவு: நயினார்

<<18807425>>’உங்கள் கனவை சொல்லுங்க’<<>> திட்டத்தை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் கனவுகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், சீரான சட்டம் ஒழுங்கு, திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், பாதுகாப்பான தமிழகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார். மேலும், முக்கியமாக திமுக இல்லாத தமிழகமே, TN மக்களின் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


