News November 29, 2024
சச்சினின் All-Time ரெக்கார்ட்டை நெருங்கிய ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினின் மிக பெரிய சாதனையை முறியடிக்கும் விளிம்பில் இருக்கிறார். ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்டில் இன்னும் 283 ரன்களை எடுத்தால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையின் ஜெய்ஸ்வால் படைத்து விடுவார். சச்சின், 2010ல் 14 போட்டியில் 7 சதம் அடித்து 1,562 ரன்களை அடித்திருந்தார். ஜெய்ஸ்வால், 12 போட்டியில் 3 சதம் உட்பட 1,280 ரன்களை விளாசி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
Similar News
News April 25, 2025
CSK அணியில் முக்கிய மாற்றங்கள்

SRH அணிக்கு எதிராக CSK விளையாடும் இன்றைய IPL போட்டியில், மூன்று முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார் கேப்டன் தோனி. விஜய் ஷங்கருக்கு பதிலாக தீபக் ஹூடாவும், ரச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக டெவால்ட் ப்ரெவிஸும், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக சாம் கரனும் களமிறங்கவுள்ளனர். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுடன் CSK அணி இப்போட்டியில் களம் இறங்கவுள்ளது.
News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
News April 25, 2025
IPL: CSK முதலில் பேட்டிங்

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் CSK vs SRH அணிகள் மோதவுள்ளன. டாஸ் வென்ற SRH கேப்டன் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் தோல்வியுறும் அணி, புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திற்கு செல்லும் என்பதால் தோல்வியை தவிர்க்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.