News October 11, 2025

சச்சின் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 23 வயதில் டெஸ்ட்டில் அதிகமுறை (5) 150+ ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின் 23 வயதில் 4 முறை 150+ ரன்களை எடுத்திருந்தார். இந்த பட்டியலில் 8 சதங்களுடன் ஆஸி., வீரர் டான் பிராட்மேன் முதலிடத்திலும், ஜெய்ஸ்வால் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

Similar News

News October 11, 2025

உங்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்குதா?

image

சென்னை, கோவை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசு அதிகம் உள்ள பகுதிகளில் மருந்து தெளிக்கவும், ஒரே இடத்தில் அதிக பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாள்களாக காய்ச்சல் குறையாவிட்டால் உடனே டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News October 11, 2025

ஆப்கன் அமைச்சரின் பிரஸ்மீட் சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்

image

டெல்லியில் நேற்று நடந்த ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் <<17974683>>பெண் செய்தியாளர்கள்<<>> அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் தூதரக அதிகாரிகளே இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதாகவும், ஆப்கன் தூதரக விவகாரங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

News October 11, 2025

இந்தியாவின் டாப் 5 பணக்கார அரசியல்வாதிகள்

image

ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கம் (ADR) வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் டாப் 5 பணக்கார அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், யார் யார் உள்ளனர், அவர்களின் சொத்து மதிப்பு என்ன, அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து மேலே உள்ள படங்களை swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்தை கமெண்ட்டில் கூறுங்கள்.

error: Content is protected !!