News October 11, 2025
சச்சின் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 23 வயதில் டெஸ்ட்டில் அதிகமுறை (5) 150+ ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின் 23 வயதில் 4 முறை 150+ ரன்களை எடுத்திருந்தார். இந்த பட்டியலில் 8 சதங்களுடன் ஆஸி., வீரர் டான் பிராட்மேன் முதலிடத்திலும், ஜெய்ஸ்வால் 2-ம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News December 12, 2025
நடிகர் ரஜினியின் சொத்து இவ்வளவு கோடியா..!

தமிழ் திரையுலகின் உச்சம் ரஜினிகாந்த், பார்க்கத்தான் சிம்பிள். ஆனால், அவரே சொன்னது போல, ‘இருக்குறது போயஸ் கார்டன்ல, போறது BMW கார்ல, சாப்பிடறது ITC ஹோட்டல்ல’ என ஆடம்பர வாழ்க்கையையே வாழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ₹430 கோடியை தாண்டியிருக்கும் என Mint செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.
News December 12, 2025
தாயின் அன்புக்கு ஈடுண்டோ.. ஆணாகவே மாறிய தாய்!

தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியம்மாளுக்கு குழந்தை பிறந்த 15-வது நாளில் கணவர் இறக்கிறார். பாதுகாப்பாக தனது மகளை வளர்க்க, வெளியூருக்கு கிளம்பிய அவர், முத்துவாக அவதாரம் எடுத்தார். தந்தையாகவும், தாயாகவும் இருந்து தனது மகளை பேணி காத்து வளர்த்து, திருமணமும் செய்து வைத்துள்ளார். 30 ஆண்டுகள் மகளுக்காக தன் வாழ்வை பேச்சியம்மாள், இன்றும் முத்துவாக வாழ்கிறார். குழந்தைக்காக தாய் எதுவும் செய்வாள் அல்லவா!
News December 12, 2025
காற்று மாசுக்கு இணைந்து தீர்வு காண வேண்டும்: ராகுல்

டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசை தடுக்க, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். சரியான திட்டம் என்றால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


