News October 11, 2025

ஜாக் மா பொன்மொழிகள்

image

*கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம். *சிறந்த நண்பர்களைத் தேடுவதற்கு பதில், உங்களுக்கு பொருத்தமான நபர்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். *தோல்வியடைந்தவர்களே அதிகமாக குறைகளை சொல்லும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள், வெற்றியாளர்கள் அல்ல. *பொறுமை என்பது உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாகும்.

Similar News

News October 11, 2025

இன்று மறந்தும் இவற்றை செய்து விடாதீர்கள்!

image

ஆன்மீக குறிப்புகளின் படி, ஒவ்வொரு நாளிலும் ஒரு ஒருசில குறிப்பிட்ட விஷயங்களை மறந்தும் செய்துவிட கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி சனிக்கிழமையில், எண்ணெய் பொருட்கள் வாங்கக்கூடாது *கசப்பு உணவுகளை சமைக்க கூடாது *நகம், முடி வெட்டக்கூடாது *வீடு துடைக்கவோ, கழுவவோ கூடாது *புது துணிகள் வாங்க வேண்டாம் *இறப்பு வீட்டிற்கு சென்றால், அதிக நேரம் இருக்க வேண்டாம் *திருஷ்டி கழித்து விடாதீர்கள். SHARE IT.

News October 11, 2025

தமிழகத்தில் இன்று கிராம சபை கூட்டங்கள்

image

தமிழகத்தில் இன்று 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் வழக்கமாக மக்களின் அடிப்படை தேவைகள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும் நிலையில், இம்முறை தெருக்கள், சாலைகளில் சாதிப் பெயர்களை நீக்கி மாற்று பெயர்கள் வைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களில் காணொளி வாயிலாக CM ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

News October 11, 2025

BREAKING: கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மக்கள் தவிப்பு

image

TN உள்பட 6 மாநிலங்களில் சமையல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், 4,000 கேஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களில் சுமார் 30 ஆயிரம் டன் சமையல் கேஸ் தேக்கம் அடைந்துள்ளது. இப்போதே, ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

error: Content is protected !!