News October 19, 2025
ஆண்மை குறையும்.. ஆண்களே இதை செய்ய வேண்டாம்

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது ஆய்வில் உறுதியாகியுள்ளது. உலகம் முழுதும் ஆண்களிடம் நடந்த தொடர் ஆய்வில், 1973-ல் இருந்ததைவிட 2011-ல் விந்தணுக்கள் எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதுடன், அவற்றின் செயல்திறனும் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது. நவீன வாழ்வியல் முறை, தவறான உணவுப் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, நச்சு ரசாயனங்கள், மது, ஸ்மார்ட்போன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாம். உஷார்!
Similar News
News October 19, 2025
உடல் எடை குறைய காலையில் இத பண்ணுங்க

Planks செய்வதால் வயிற்று கொழுப்பு குறைவதுடன், எலும்புகள் வலுவடைகின்றன *இதனை செய்ய, கைகளை மடக்கி 2 கைமுட்டிகளையும் தரையில் ஊன்றவும் *கால்களை நீட்டி, கால் விரல்களால் உடலை சமநிலைப்படுத்தவும் *வயிற்றுத் தசைகளை இறுக்கிப் பிடித்து, இடுப்பும் முதுகும் நேராக இருக்கச் செய்யவும் *பார்வையை தரையில் வைக்கவும் *இந்த நிலையில், முடிந்தவரை சில விநாடிகள் இருக்கலாம். பிறகு ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் செய்யலாம்.
News October 19, 2025
தீபாவளி நாளில் மழை வருமா? வராதா?

அக்.20 தீபாவளியன்று டூர் போகலாம், பட்டாசு வெடிக்கலாம் என பலரும் பல கனவில் உள்ளனர். அவர்களுக்கு வருண பகவான் ஷாக் கொடுத்துள்ளார். அன்றைய தினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. அதனால், கவனமா இருங்க!
News October 19, 2025
Business Roundup: HDFC வங்கியின் நிகர லாபம் ₹19,610 கோடி

*இந்திய பங்குச்சந்தைகள் ₹13,840 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. *2025 Q2 காலாண்டில், தனியார் வங்கிகளிலேயே அதிகபட்சமாக HDFC ₹19,610 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. *GST குறைப்பின் மூலம் PM மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு சென்றடைந்ததாக நிதியமைச்சர் பேச்சு. *RBL வங்கியில் ₹26,850 கோடி முதலீடு செய்ய உள்ளதாக UAE-ஐச் சேர்ந்த Emirates NBD அறிவிப்பு.