News October 26, 2025

அதிமுகவுடன் வந்தால் விஜய்க்கு நல்லது: KTR

image

விஜய்யின் மாஸ் ஓட்டாக மாறவேண்டும் என்றால், அவருக்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை என்று KTR தெரிவித்துள்ளார். விஜய் கூட்டணிக்கு வந்தால், அதிமுகவினர் அந்த பயிற்சியாளர்களாக இருப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவுடன் இணைந்தால் விஜய்க்கு தான் நல்லது என்று கூறியுள்ள KTR, விஜய் வந்தால், அதிமுக 220 சீட்டில் வெல்லும், வரவில்லை என்றால் 150 சீட்டில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

image

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட ₹1 பிளான், நவ.15 வரை நடைமுறையில் இருக்கும் என BSNL தெரிவித்துள்ளது. அதன்படி, ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். சுதந்திர தினத்திற்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும். SHARE

News October 26, 2025

‘வந்தே மாதரம்’ பாடலை கொண்டாட PM அழைப்பு

image

PM மோடி இன்று 127-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அதில், வரும் நவ.7-ம் தேதியன்று நாம் வந்தே மாதரம் பாடல் இயற்றி 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இதை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக மாற்ற வேண்டும், வரும் தலைமுறையினருக்காக இந்த கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர், நமது பண்டிகைகளை மேலும் வண்ணமயமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

News October 26, 2025

பிக் பாஸ் Wild Card Entry இவரா? கம்ருதீனுக்கு செக்!

image

பிக் பாஸ் சீசன் 9-ல் Wild Card மூலம் 4 போட்டியாளர்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்த திவ்யா இந்த வாரம் முதலில் எண்ட்ரீ கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும், கம்ருதீனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், இவர் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணி பிக் பாஸ் குழு இவரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாம்.

error: Content is protected !!