News October 19, 2025
47 முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸா ஊடகம்

போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
1 மாதம் இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை 1 மாதம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ரீசார்ஜ் பிளான்களை VI அறிமுகப்படுத்தியுள்ளது. ₹379-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியுடன் Unlimited calls, தினமும் 100 SMS, தினமும் 2GB உடன் ஒரு மாதம் ஹாட் ஸ்டார் சேவையை இலவசமாக பெறலாம். மேலும், Unlimited 5G சேவையை பயன்படுத்தலாம். அதேபோல், ₹419 பிளானிலும் 1 மாதம் ஹாட் ஸ்டார் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. SHARE IT.
News October 19, 2025
தீபாவளி ஸ்பெஷல்: எந்த இனிப்பு எவ்வளவு கலோரி!

தீபாவளிக்கு இனிப்புகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அப்படி நாம் சாப்பிடும் இனிப்புகளின் கலோரி எவ்வளவு தெரியுமா? *மைசூர் பாக் 1 துண்டு 200 கலோரி * அதிரசம் 1 துண்டு 150 கலோரி *குலாப் ஜாமுன் 2 துண்டுகள் 350 கலோரி *ரசகுல்லா 2 துண்டுகள் 300 கலோரி *பூந்தி லட்டு 2 துண்டுகள் 410 கலோரி *எள்ளுருண்டை 1 துண்டு 200 கலோரி. ஒருநாள் என்றாலும் அளவோடு சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடுங்கள் என்பதே நிபுணர்கள் அட்வைஸ்.
News October 19, 2025
தீபாவளி குறித்து அகிலேஷ் யாதவ் சர்ச்சை கருத்து

கிறிஸ்துமஸின் போது உலகின் பல நகரங்கள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றன, ஆனால் தீபாவளியன்று நாம் ஏன் அகல் விளக்குகளுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்ற அகிலேஷ் யாதவ்வின் கேள்வி சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பன்சால், வாடிகனில் சென்று அகிலேஷ் கிறிஸ்துமஸை கொண்டாடட்டும், அங்காவது அவருக்கு 2-4 வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று சாடியுள்ளார்.