News October 19, 2025
கடவுளை வணங்கும் போது இப்படி நடந்து இருக்கா?

கடவுளிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம் ➥வேண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வந்தால் வேண்டுதல் பலிக்கும் ➥குழந்தை அழும் சத்தம் கேட்டால், கடவுள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம் ➥வேண்டும் பொழுது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும் ➥கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடிக்கும் சத்தம் கேட்டாலும், கடவுள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என நம்பப்படுகிறது.
Similar News
News April 6, 2026
திமுகவில் இணைந்த நிர்வாகிகள் – அதிர்ச்சியில் அமமுக!

காட்பாடி பகுதியில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.G.பார்த்திபன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகினார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்களை திமுகவில் இணைத்ததை தொடர்ந்து துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
News April 6, 2026
செல்வப்பெருந்தகை வடசென்னை செல்ல கட்டுப்பாடு

திரு.வி.க. நகர் தொகுதியில் பொற்கொடி களமிறங்கிய நிலையில், வட சென்னை முழுவதும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையுடன் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தியும், திமுகவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதாம். இதுதொடர்பாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், கொளத்தூர் உள்பட வட சென்னை பகுதிகளில் செல்வப்பெருந்தகை பிரசாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
News April 6, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் 5 நாள்கள் விடுமுறையாகும்.


