News August 25, 2024
தவெக மாநாடு இடம் மீண்டும் மாறுகிறதா?

தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்கிரவாண்டியை இறுதி செய்ததாகக் கூறப்பட்டது. எனினும், தற்போது மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர், சேலம், நெல்லையில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News July 11, 2025
பாக்., பஸ்ஸில் 9 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், அதில் 9 பேரை மட்டும் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. So Sad..!
News July 11, 2025
95 வருட சாதனையை உடைப்பாரா கில்?

இந்திய டெஸ்ட் கேப்டன் கில் ENG-க்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில், 4 இன்னிங்ஸில் 585 ரன்களை விளாசி இருக்கிறார். அவர் இன்னும் 6 இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 95 வருட ரெக்கார்டை தகர்த்து விடுவார். 1930-ல் பிராட்மேன் ENG-க்கு எதிராக 974 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருக்கிறது. சாதிப்பாரா கில்?
News July 11, 2025
ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.