News April 24, 2025

அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிறிஸ் கெயிலா?

image

சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சை தவிர்த்து பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் அர்ஜுனுக்கு பயிற்சி அளித்தால் அவர் அடுத்த கிறிஸ் கெயிலாக உருவெடுப்பார் என யோக்ராஜ் கூறியுள்ளார். சச்சினுக்கும் யுவராஜ் நெருக்கமாக உள்ளதால் 3 மாதங்கள் அர்ஜுனுக்கு யுவராஜ் பயிற்சி அளிக்கலாம் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இராம்நாடு மாவட்ட மக்கள் 04567-230036 or 94450-48893 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

முஸ்லிம் கட்சிகளுக்கு பாராபட்சம் காட்டும் திமுக?

image

கூட்டணி கட்சிகளுக்கு எப்படியெல்லாம் தொகுதிகளை குறைத்து கொடுக்கலாம் என திமுக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 2 முஸ்லிம் கட்சிகளுக்கு (IUML, மமக) 5 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது திமுக. ஆனால் தற்போது 4 முஸ்லிம் கட்சிகளுக்கும் சேர்த்தே 5 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருக்கிறதாம். இதனால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம் கட்சிகள், திமுக கூட்டணியை விட்டு விலகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.

News February 7, 2026

கூட்டணி விவகாரத்தில் CM ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்

image

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள போதிலும் கூட்டணி விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாக திமுகவினர் கூறி வரும் போதிலும், காங்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, மநீம என அனைவருமே கூடுதல் சீட்டுகள் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்கு புதிய கட்சியின் வருகையே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க ஸ்டாலின் திமுகவில் விரைவில் குழு ஒன்றை அமைக்க உள்ளாராம்.

error: Content is protected !!