News March 27, 2024
IPL: புதிய சாதனை.. 16 பந்தில் அரை சதம்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 16 பந்துகளை எதிர்கொண்ட இவர் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தற்போது வரை SRH 10 ஓவரில் 148/2 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 300 ரன்களை தொட வாய்ப்புள்ளது.
Similar News
News February 19, 2026
மகா.,வில் முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 2014-ல் காங்.,- NCP கூட்டணி இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்பை கோர்ட்டும் இந்த இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டதாக நேற்று மகா அரசு அறிவித்துள்ளது.
News February 19, 2026
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். இக்கோயிலின் முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
இந்த 3 இடங்களில் ஜெயித்தால் கோட்டை கன்ஃபார்ம்!

தமிழக தேர்தல் களத்தில் கட்சிகளின் வியூகம் எந்த அளவிற்கு பார்க்கப்படுகிறதோ, அதே அளவிற்கு சென்டிமெண்டும் கவனிக்கப்படும். அந்தவகையில் ராமநாதபுரம், நாமக்கல், வேடச்சந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகிறது. அதன்படியே 1967 முதல் 2016 வரை இந்த 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் அல்லது அதன் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது என்பது தான் வரலாறு.


