News March 27, 2024
IPL: புதிய சாதனை.. 16 பந்தில் அரை சதம்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 16 பந்துகளை எதிர்கொண்ட இவர் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தற்போது வரை SRH 10 ஓவரில் 148/2 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 300 ரன்களை தொட வாய்ப்புள்ளது.
Similar News
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <
News December 5, 2025
பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.
News December 5, 2025
ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.


