News April 25, 2024
IPL: மிக மோசமான சாதனை படைத்த மோஹித் ஷர்மா

DC அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் GT அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் எதிரணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். DC-க்கு எதிரான இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மோஹித் விக்கெட் எதுவும் எடுக்காமல் 73 ரன்களை DC அணிக்கு வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக RCB அணியின் பசில் தம்பி (70) உள்ளார்.
Similar News
News September 22, 2025
ஆவின் விலை குறைப்பில் திருட்டுத்தனம்: அன்புமணி

ஆவின் பொருள்களின் விலை குறைப்பில், திமுக அரசு திருட்டுத்தனம் செய்திருப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை எனவும் மாறாக அடிப்படை விலை ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரி குறைப்பால் ₹656க்கு விற்கப்பட வேண்டிய ஆவின் 1L நெய்யின், அடிப்படை விலையை ₹625-ல் இருந்து ₹669 ஆக உயர்த்தி GST வரி சேர்த்து விலையை ₹700 நிர்ணயித்து இருப்பதாக சாடியுள்ளார்.
News September 22, 2025
கண்களை மூடினால் தோன்றும் நிறம் கருப்பு கிடையாதா?

கண்களை மூடினால் என்ன நிறம் தெரியும்? கருப்பு என்கிறீர்களா? இல்லை. கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால் கருப்பு நிறம் தான் தோன்றுகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கண்களை மூடினால் தோன்றும் நிறம் eigengrau என அழைக்கப்படுகிறது. அதாவது, அடர்ந்த சாம்பல் நிறத்தை தான் ஜெர்மன் மொழியில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் காலியாகவுள்ள 122 மேனேஜர், டெபுடி மேனேஜர், மேனேஜர் (Credit Analyst) உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E., B.Tech., MBA. வயது வரம்பு: 25 – 35 (சில பதவிகள் மாறுதலுக்கு உட்பட்டது). சம்பளம்: ₹64,820 – ₹1,05,280. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <