News April 20, 2025

IPL BREAKING: LSG த்ரில் வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில், LSG அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த LSG அணியின் மார்க்ரம், பதோனி அடித்த அரைசதத்தால், அந்த அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்த RR அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். இறுதிவரை போராடியும் RR அணியால் வெற்றி பெறவில்லை. 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG த்ரில் வெற்றி பெற்றது.

Similar News

News July 9, 2025

ஆஸி., லெஜெண்ட் பவுலர் காலமானார்

image

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் கார்டன் ரோர்க்கி (87) காலமானார். 1959-ல் விளையாட தொடங்கிய இவர், தன் ஆக்ரோஷ பவுலிங் ஆக்‌ஷனால் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால், இந்தியா டூரின் போது இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்க, இவரது சர்வதேச கரியர் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News July 9, 2025

மாமியாரே என் துணிகளை துவைக்கிறார்: Priyanka Chopra

image

துணி துவைப்பது எப்படி என்று தனது மாமியாரே கற்றுக் கொடுத்ததாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஆனாலும் அவரே தனது துணிகளை துவைப்பதாகவும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், துணிகளை மடித்து அயர்ன் செய்வது எளிதானது என்றாலும், அவற்றை துவைப்பது என்பது சற்று கடினமான வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் துணிகளை எப்போது நீங்களே துவைக்க தொடங்கினீர்கள்? (அ) துவைக்கப் போகிறீர்கள்?

News July 9, 2025

குஜராத் பாலம் விபத்து: PM மோடி இரங்கல்

image

குஜராத்தில் <<17003795>>பாலம் இடிந்து விழுந்த விபத்தில்<<>> உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!