News October 17, 2024
IPL 2025: ஆர்சிபி அணியில் ரோஹித் ஷர்மா?

IPL 2025 தொடரில் ஆர்சிபி அணிக்காக ரோஹித் ஷர்மா விளையாடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியிலிருந்து அவர் விலகுவது ஏறத்தாழ உறுதியான நிலையில், அவரை ஆர்சிபி ஏலத்தில் எடுக்கலாமெனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் IPL தொடரில், மும்பை அணியைத் தவிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அப்போது 2009இல் அந்த அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
எடை குறையவே மாட்டேங்குதா? இது காரணமா இருக்கலாம்..

உடற்பயிற்சி செய்தாலும், Diet-ல் இருந்தாலும் உடல் எடை குறையவே இல்லையா? அதற்கு இவை காரணமாக இருக்கலாம்.. ▶அதிகமாக cardio பயிற்சி மேற்கொண்டால் மெட்டபாலிசம் குறையும் ▶அதிக நேரம் உட்கார்ந்தே இருக்காதீங்க ▶சரியான கலோரிகளில் உணவு உட்கொள்ளவேண்டும் ▶போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் ▶தூக்கமின்மை; அதீத Stress; சில மருந்துகள்; PCOS, சக்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் இதற்கு காரணமாக இருக்கலாம்..
News August 19, 2025
அதிமுகவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்

அதிமுகவில் அதிரடி அரசியலை செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். அந்தியூரில் இன்று 100-க்கும் அதிகமான மாற்று கட்சியினரை அதிமுகவில் இணைத்துள்ளார். இதன் மூலம் ஈரோடு தனது கோட்டை என்பதை 2026 தேர்தலில் நிரூபிக்க, செங்கோட்டையன் ஆட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். EPS உடன் அதிருப்தி, பாஜகவில் இணைய உள்ளார் என்ற வதந்திகளுக்கு எல்லாம் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உங்கள் கருத்து?
News August 19, 2025
BREAKING: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 3 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக என்.ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் தலைமையக சட்டம் – ஒழுங்கு உதவி IG-யாக முத்தரசியும், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மைய SP-யாக அதிவீர பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.