News August 2, 2024

IOC வேலை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ஆயில் (IOC) நிறுவனத்தின் தெற்குப் பிராந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் 400 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 மணிக்கு <>https://iocl.com/apprenticeships<<>> என்ற இணையதளத்தில் தொடங்கியது. விருப்பமுடையோர் இம்மாதம் 19ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 18, 2025

அதிமுகவில் இணைந்தனர்

image

2026 தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2025

கலர்புல்லாக மாறப்போகும் வேட்பாளர்களின் போட்டோஸ்

image

பிஹார் சட்டமன்ற தேர்தல் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோஸ் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இனி வரும் எல்லா மாநில தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாம். இதனால் வாக்களிக்கும்போது வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் இருக்காது என ECI தெரிவித்துள்ளது.

News September 18, 2025

தமிழக அரசுக்கு CPM எச்சரிக்கை

image

தமிழக அரசு, தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தில் உரிய அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால், அதை எதிர்த்து போராடு​வதை தவிர வேறுவழியில்லை என CPM பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை குறிப்பிட்ட அவர், எவ்வித அடிப்​படை வசதி​களும் இல்​லாமல் கொடுமையான சுரண்​டல் ஒப்​பந்த முறை தமிழகத்​தில் நடந்து கொண்​டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!