News December 2, 2024
விழுப்புரத்தில் CM ஸ்டாலின் ஆய்வு

ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல், வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து CM ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு செய்த அவர், புயல் பாதிப்பு பற்றியும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
Similar News
News August 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 435 ▶குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். ▶ பொருள்: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
News August 22, 2025
வரலாற்று சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20களில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார். இச்சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைப்பார்.
News August 22, 2025
விஜய் கருத்து ஒரு மொட்டை கடிதாசி: கமல்ஹாசன்

மதுரையில் நடந்த TVK 2-வது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் எனது பெயரையோ அல்லது வேறு யார் பெயரையோ குறிப்பிட்டு இந்த கருத்தை கூறாத போது, நான் ஏன் முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போட வேண்டும் என கேட்டார். மேலும் விஜய்யை தனது தம்பி என்றும் தெரிவித்தார்.