News August 22, 2025

விஜய் கருத்து ஒரு மொட்டை கடிதாசி: கமல்ஹாசன்

image

மதுரையில் நடந்த TVK 2-வது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் எனது பெயரையோ அல்லது வேறு யார் பெயரையோ குறிப்பிட்டு இந்த கருத்தை கூறாத போது, நான் ஏன் முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போட வேண்டும் என கேட்டார். மேலும் விஜய்யை தனது தம்பி என்றும் தெரிவித்தார்.

Similar News

News January 14, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்புகள் மற்றும் புதுமையாளர்களுக்காக, 15வது Source India – Electronics Supply Chain Expo கண்காட்சி நடத்தப்படுகிறது. ELCINA அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, StartupTN ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்வு, பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.

News January 14, 2026

‘மத்திய பட்ஜெட்’ மக்களிடம் கருத்து கேட்கும் அரசு

image

பிப்.1-ம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. இந்நிலையில், பட்ஜெட் உருவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை ஜன.16-ம் தேதிக்குள் வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு MyGov.in-ல் லாகின் செய்து Activities→Union Budget 2026-27→Comment Box-ல் கருத்துகளை பதிவிடுங்கள். இதனால், மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.

News January 14, 2026

பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா?

image

இன்று வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, நம் பொங்கல் வாழ்த்துகளை சொல்லி விடுகிறோம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் என்றாலே வாழ்த்து அட்டைகள்தான். பொங்கல் காட்சிகள், நடிகர்கள், தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளை பார்த்துப் பார்த்து வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்புவோம். தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி!

error: Content is protected !!