News October 14, 2025
2025-ல் வசூல் வேட்டையாடிய படங்கள்!

2025 முடிவுக்கு வர இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. இன்னும் பல பெரிய படங்கள் ரீலிசுக்கு காத்திருந்தாலும், இந்திய பாக்ஸ் ஆபிசில் பல படங்கள் வசூல் வேட்டையாடியுள்ளன. கலவையான விமர்சனம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பில் வசூலை வாரிக் குவித்த படங்கள்தான் இந்த ஆண்டு அதிகம். அப்படி இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்டை மேலே உள்ள படத்தை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.
Similar News
News October 14, 2025
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது. இந்நிலையில், 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. DCM சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு DCM விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 9 பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
News October 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. நாளை ரெடியா இருங்க!

சுமார் 1.15 கோடி பேருக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 தவணையாக ₹1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், 26-வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீதான கள ஆய்வையும் அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படும். SHARE IT.
News October 14, 2025
பெளர்ணமி நிலவாய் பிரகாசிக்கும் ருக்மினி!

‘என் மூச்சவ பேச்சவ, பேர் சொல்லும் அழகவ, எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ’ என்ற ‘டியூட்’ பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களை ரிபீட் மோடில் பாட வைத்துவிட்டார் ருக்மினி வசந்த். மூன்றே படத்தில் ரசிகர்களின் மனதில் அடுத்த 30 வருடங்களுக்கு குடியேறிவிட்ட அவர், புதிய போட்டோஷுட் நடத்தி SM-ல் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹார்ட் பதிவிடும் ரசிகர்கள், அடுத்த தமிழ் படத்தின் அப்பேட் கேட்டு அன்பு தொல்லை கொடுக்கின்றனர்.