News September 3, 2025
ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
தீபாவளி பரிசு கிடைத்துவிட்டது: தமிழிசை

GST வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்த நிலையில், மோடி சொன்னபடி தீபாவளி பரிசை கொடுத்துவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட வரி மாற்றம் நோயாளிகளுக்கு இருந்த பெரும் சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மோடிக்கு, எதிர்க்கட்சியினர் பாராட்டு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 4, 2025
EB இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இனி, முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற தேவையில்லை என EB உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
News September 4, 2025
கூட்டணி மாற்றம்.. கைகோர்க்க போகும் 4 தலைவர்கள்?

EPS-வுடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், NDA கூட்டணியில் இருந்து OPS-ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார். குறிப்பாக, நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசும் செங்கோட்டையன், சசிகலா, OPS, டிடிவியை சந்திக்கவும் இருக்கிறாராம். அவரின் நாளைய பேச்சுக்கு பின், தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.