News March 23, 2024

அரபிக் கடலில் 10 போர் கப்பல்களை இறக்கிய இந்தியா

image

அரபிக் கடல், செங்கடல், ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் 10 போர் கப்பல்களை நிலைநிறுத்தி இருப்பதாக கடற்படைத் தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆபரேசன் சங்கல்ப் கீழ், கடற்கொள்ளையர், ஏவுகணை, டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைக்காக 10 போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளோம். வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கரையை அடைவதற்கான பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதே பணி” என்றார்.

Similar News

News January 21, 2026

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) உதகை ஆட்சியர் அலுவலகம் BLOCK 4 இல், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <>https://www.tnprivatejobs.tn.gov.in <<>>இணையதளம் மற்றும் 9499055948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசு டாக்டர்கள்!

image

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 28-ம் தேதி முதல் சென்​னை​யில் 2 நாட்​கள் அடையாள உண்​ணாவிரத போராட்​டம் நடத்தப்படும் என அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய படி ₹3,000 உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறனர். ஏற்கெனவே கடந்த 12-ம் தேதி முதல் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து 20,000 அரசு டாக்டர்கள் TN முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

News January 21, 2026

Assembly: மறைந்தவர்களுக்கு இரங்கல் வாசிப்பு

image

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2025-ல் உயிரிழந்த முன்னாள் MLA-க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் , MLA பொன்னுசாமி, மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

error: Content is protected !!