News November 24, 2024
IPL ஏலத்தில் முக்கியமான RTM

RTM (Right-to-Match) என்பது வீரர் ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஏலத்தின் போது, அவரை தக்கவைக்க உதவும். (எ.கா) DC’யில் விளையாடிய பண்ட்டை ₹10 கோடிக்கு CSK வாங்கினாலும், RTM பயன்படுத்தி DC அவரை தக்கவைக்கலாம். ஆனால், விலையை CSK ₹13 கோடியாக உயர்த்தினால், அவ்விலையை கொடுத்தே, பண்ட்டை DC’யால் தக்கவைக்க முடியும். இல்லையேல் பண்ட் CSK’யில் விளையாடுவார். Stay tuned with Way2News for IPL updates.
Similar News
News August 17, 2025
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வருகின்ற ஆக.22ம் தேதி இரவு 10:30 மணி அளவில் ஆவணி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளதால் பக்தக் கோடிகள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளலாம். அங்காலம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 17, 2025
சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி.. தமிழக அரசின் புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?