News March 20, 2024
இளையராஜா மீது எப்போதும் பொறாமை இல்லை

இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.
Similar News
News April 18, 2025
1-5ம் வகுப்பு பள்ளிகளுக்கு 45 நாள்கள் விடுமுறை துவக்கம்

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் ஜூன் 1 வரையிலான 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். சிலர் தாத்தா-பாட்டி ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். மேலும் சிலர், அடுத்த ஆண்டுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
News April 18, 2025
₹10,000ஐ தொட்ட தங்கம் விலை

தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.
News April 18, 2025
சூடு பிடிக்கும் நியோமேக்ஸ் வழக்கு

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் வழக்கு தொடர்பாக ₹600 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது. இதில், சுமார் ₹5,000 கோடி ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ₹121.80 கோடி (இன்றைய மதிப்பில் ₹600 கோடி) மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.