News March 20, 2024
இளையராஜா மீது எப்போதும் பொறாமை இல்லை

இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.
Similar News
News February 11, 2026
வந்தே மாதரம்… இனி நீக்கப்பட்ட வரிகளையும் பாட உத்தரவு!

வந்தே மாதரம் பாடலில் நாட்டை பெண் தெய்வங்களுடன் ஒப்பிடும் வரிகள் இருப்பதால் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, 1937-ல் முதல் இரண்டு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்., அங்கீகரித்தது. அது 1950-ல் அதிகாரப்பூர்வமானது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக அரசு, தற்போது நீக்கப்பட்ட வரிகளையும் சேர்த்தே வந்தே மாதரத்தை இசைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
News February 11, 2026
ஆட்சியில் பங்கில்லை என்பது CM கருத்து: செல்வப்பெருந்தகை

TN-க்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என CM சொன்னது அவருடைய கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் CM கருத்துக்கு <<19109470>>மாணிக்கம் தாகூர்<<>> எதிர்வினை ஆற்றியதை பற்றி பேசிய அவர், கருத்து தெரிவித்தாலே கூட்டணியில் பிளவு என்று அர்த்தமா என கேட்டுள்ளார். மேலும், இது குறித்து திமுக தலைமையும், காங்., தலைமையும் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கார்களின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், <<19104598>>ஹோண்டாவை<<>> தொடர்ந்து ரெனால்ட் தனது Kwid, Triber, Kiger மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எந்தெந்த மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


