News August 9, 2025
2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்..

உங்கள் ஊரை விட்டு வெளியூரில் செட்டிலான பிறகு, அங்கே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தால் மட்டும் போதாது. பழைய ஊரின் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதும் அவசியம். பெயரை நீக்க, எலெக்ஷன் கமிஷனின் Form 7 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது உங்கள் பெயரில் போலியாக வாக்கு பதிவாகுவதை தடுக்கும். வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தீர்ப்பது மக்களின் கடமையும் கூட. SHARE IT.
Similar News
News August 9, 2025
பெங்களூருவில் ₹1650 கோடியில் பிரமாண்ட ஸ்டேடியம்

பெங்களூருவில் RCB அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தை நகரின் மைய பகுதியிலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொம்மசந்திராவில் ₹1,650 கோடி செலவில் 80,000 இருக்கைகளுடன் புதிய ஸ்டேடியம் அமைக்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய ஸ்டேடியமாக இது அமையவுள்ளது.
News August 9, 2025
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

இந்த வாரம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(ஆக.9) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,445-க்கும், சவரன் ₹75,560-க்கும் விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் ₹127-க்கும் ஒரு கிலோ ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News August 9, 2025
‘BRA’வில் ஒளிந்துள்ள ஆபத்து

தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. பெண்கள் அணியும் ‘பிரா’வும் இதில் விதிவிலக்கல்ல. சுமார் 64% பிரா பிராண்டுகளில், ஆபத்தான கெமிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரா, உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன.