News August 9, 2025
‘BRA’வில் ஒளிந்துள்ள ஆபத்து

தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. பெண்கள் அணியும் ‘பிரா’வும் இதில் விதிவிலக்கல்ல. சுமார் 64% பிரா பிராண்டுகளில், ஆபத்தான கெமிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரா, உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன.
Similar News
News November 10, 2025
டெல்லி கார் வெடிப்பு: அமித்ஷாவிடம் PM ஆலோசனை

தலைநகர் டெல்லியில் நடத்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், PM மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கார் வெடிவிபத்து குறித்து டெல்லி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
News November 10, 2025
கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் செய்யும் சில தவறுகள் தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ அதிகமாக அருந்த வேண்டாம் ➤டாக்டரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிக நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News November 10, 2025
ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தா, ஸ்ரீநகர், காசியாபாத், லக்னோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கார் வெடி விபத்து குறித்து முழு விவரத்தை டெல்லி காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார்.


