News April 12, 2025
இனி சிக்ஸ் அடிப்பேன்: அண்ணாமலை உறுதி

கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக செயல்படப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்கவுள்ளார். இதனால், அண்ணாமலைக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இனி ஒவ்வொரு விவகாரத்திலும் சிக்ஸ் அடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தனக்கென்று இனி எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News January 7, 2026
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சூரஜ் (27). இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்து, சத்திய சூரஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 7, 2026
சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!


