News September 30, 2025
கரூர் செல்வேன்: விஜய் அறிவிப்பு

கரூர் துயரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என விஜய் கூறியுள்ளார். <<17876190>>இன்று வெளியிட்ட வீடியோவில்<<>>, கூடிய விரைவில் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை சந்திப்பேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் விஜய் பேசியுள்ளார்.
Similar News
News March 20, 2026
பெண் டாக்டர் வன்கொடுமை: தேர்தலில் களமிறங்கும் தாய்!

கொல்கத்தா ஹாஸ்பிடலில் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட டாக்டரின் தாயார் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது மகள் வழக்கில் இடையூறு செய்த மம்தா ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேநேரம், இந்த வழக்கை பாஜக அரசியலாக்குவதாக திரிணாமுல் குற்றம்சாட்டியுள்ளது.
News March 20, 2026
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. பரபரப்பு

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக – விசிக இடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று திருமாவளவனை விஜய்யே அழைத்ததாக விசிக மாணவரணி துணை செயலாளர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக வலை விரித்தது விசிகவுக்குத்தான் என அரசியல் நோக்கர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2026
ஈரான் போர்: மத்திய அரசை புகழ்ந்த காங்., MP சசி தரூர்!

ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மெளனம் கோழைத்தனம் அல்ல; சிறப்பான ராஜதந்திரம் எனக் காங்கிரஸ் MP சசிதரூர் புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல், மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுவதாக மற்றொரு MP மணீஷ் திவாரியும் பாராட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் PM மோடி கோழைத்தனமாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி MP-க்கள் அரசை புகழ்ந்துள்ளனர்.


