News September 30, 2025
சர்ச்சை ட்வீட்.. ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பாய்ந்தது

சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, நேபாள் போல தமிழகத்திலும் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் X-ல் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை நீக்கியிருந்தார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அவர் மீது, சென்னை காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
Similar News
News December 14, 2025
கர்நாடக காங்., பஞ்சாயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளியா?

கர்நாடகா CM பதவிக்கான பஞ்சாயத்தில் ஏற்கெனவே தங்களுக்குள் <<18420626>>எந்த பிரச்னையும் இல்லை<<>> என CM சித்தராமையா, DCM டிகே சிவகுமார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் சோனியா காந்தியை இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் மூலம் கர்நாடக காங்.,-ல் நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 14, 2025
சற்றுமுன்: பிரபல வில்லன் நடிகர் காலமானார்

தி மாஸ்க், பல்ப் ஃபிக்சன் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன்(60) மர்மமான முறையில் உயிரிழந்தார். நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பீட்டர் கிரீன் மறைவுக்கு ஹாலிவுட், பாலிவுட் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 14, 2025
மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்

ஒரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணம் மற்றொரு மாநிலத்துக்கு பொருந்தாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, அமித்ஷா தமிழ் உணவு, தமிழ் மொழிதான் பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தலுக்காக வந்துவிட்டு செல்வார்களே தவிர, அவர்களுக்கு தமிழ், தமிழகத்தை பற்றி எந்த அக்கறையும் இருக்காது எனவும் விமர்சித்தார்.


