News March 28, 2024
நீலாம்பரி கேரக்டரில் நடிக்க மறுத்து விட்டேன்

படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க படக்குழு முதலில் தன்னை அணுகியதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நீலாம்பரி கேரக்டரில் நடிக்க, என் அம்மா சம்மதிக்கவில்லை. ரஜினியோடு பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நெகட்டிவ் கேரக்டர் ஒத்து வராது என அவர் நினைத்தார்கள். அம்மாவின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.
Similar News
News July 6, 2025
போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் தகவல்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன – அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் என்றார்.
News July 6, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை. * உங்களை நீங்களே அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானமாகும். *வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும். *எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
News July 6, 2025
வேற லெவல்… அஜித் அப்படியே இருக்காரே..

கார் பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். பந்தயங்களில் பங்கேற்றாலும், முழுநீள ரேஸ் படத்தில் நடிக்காத அஜித்தின் இந்த ஆசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.