News May 2, 2024
ஹைதராபாத் அணி பேட்டிங்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள RR அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்ற SRH அணி புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்.
Similar News
News September 21, 2025
டாஸ்மாக் கடைகளில் இனி ரூல்ஸ் மாறுது!

மதுக்கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காலத்தில் மதுப்பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ரூல்ஸ் உங்களுக்கு ஓகேவா?
News September 21, 2025
55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின்

தூத்துக்குடியில் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு தற்போது தூத்துக்குடியில் அமையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
நவராத்திரியும் 9 தேவிகளும்

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.