News November 30, 2024
புயல் உதவி தொலைப்பேசி எண்கள்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோர் அழைக்க வேண்டிய தொலைப்பேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1070 என்ற மாநில உதவி எண்ணையோ, 1077 என்ற மாவட்ட உதவி எண்ணையோ மக்கள் அழைக்கலாம். மேலும், வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ள, 9445869848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
News April 28, 2025
பண்டுக்கு போதாத காலம்.. ₹24 லட்சம் அபராதம்

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் LSG படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன் சேர்த்து LSG கேப்டன் பண்டுக்கு இன்னொரு அடியும் விழுந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவருக்கு ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த MI-க்கு எதிரான போட்டியிலும், அவருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
News April 28, 2025
உங்களை avoid செய்கிறாரா? இதோ அறிகுறிகள்

உங்கள் கணவனோ, மனைவியோ உங்களை கட்டுப்படுத்த (அ) தவிர்க்க நினைக்கிறார் என்பதை இந்த அறிகுறிகளால் அறியலாம்: *குடும்பத்தினர், உறவினர்கள் & நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவது *சின்ன விஷயங்களுக்கு கூட உங்களையே குறைகூறுவது *தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் உங்களையே காரணமாக்குவது *குடும்பம், குழந்தைகள், வசதி இவற்றை காட்டி உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது *உங்கள் சாதனைகளை அங்கீகரிக்காதது. வேறு ஏதாவது?