News September 23, 2024
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் <<14170391>>சீசிங் <<>>ராஜாவை போலீஸ் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தது. நீலாங்கரை அருகே வந்தபோது மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீசை சீசிங் ராஜா சுட்டதாகவும், இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுன்ட்டரில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சீசிங் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
Similar News
News August 23, 2025
என்னிடம் கற்றதை விஜய் சொல்கிறார்: சீமான்

TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.
News August 23, 2025
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீண்ட நேரம் இரவில் உணவு இல்லாமல் இருந்த உடல், காலை உணவின் மூலம் புதிய சக்தி பெறுகிறது. ஆதலால் தான் காலை உணவு முக்கியமென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. அதே சமயம் தேவையற்ற காலை உணவும் உடலை கெடுக்கிறது. அவை என்னென்ன என்பதை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.
News August 23, 2025
பாக்., குப்பை லாரி கருத்து: ராஜ்நாத் சிங் பதிலடி

இந்தியா “பளபளக்கும் Mercedes” என்றும், பாகிஸ்தான் “குப்பை லாரி” என்றும் பாக்., ராணுவ தளபதி முனீர் அண்மையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய ராஜ்நாத் சிங், ஒரே நேரத்தில் சுதந்திரமடைந்த 2 நாடுகள், கடின உழைப்பு, சரியான கொள்கைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு நாடு Ferrari போன்ற பொருளாதாரத்துடனும், மற்றொன்று குப்பைவண்டி நிலையிலேயே உள்ளது என்றால், அது அவர்களின் சொந்த தோல்வி என விமர்சித்துள்ளார்.