News August 23, 2025

பாக்., குப்பை லாரி கருத்து: ராஜ்நாத் சிங் பதிலடி

image

இந்தியா “பளபளக்கும் Mercedes” என்றும், பாகிஸ்தான் “குப்பை லாரி” என்றும் பாக்., ராணுவ தளபதி முனீர் அண்மையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய ராஜ்நாத் சிங், ஒரே நேரத்தில் சுதந்திரமடைந்த 2 நாடுகள், கடின உழைப்பு, சரியான கொள்கைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு நாடு Ferrari போன்ற பொருளாதாரத்துடனும், மற்றொன்று குப்பைவண்டி நிலையிலேயே உள்ளது என்றால், அது அவர்களின் சொந்த தோல்வி என விமர்சித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

image

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.

News January 21, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $106.00 உயர்ந்து $4,784.53-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $0.75 உயர்ந்து $95.33 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.21) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 21, 2026

இன்று மாலை தவெக பிரசாரக் குழு கூட்டம்

image

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!