News April 8, 2024
ஆவாரம்பூ சர்பத் செய்வது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது ஆவாரம்பூ. ஆவாரம்பூவை வைத்து உடலுக்கு நன்மை தரும் சர்பத் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, ஏலக்காய், இஞ்சி துண்டுகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் ஆவாரம்பூ (ஊற வைத்தது) நீரை ஊற்றி, தேன் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News January 25, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (24.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
CINEMA 360°: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ஜீவா படம்

*ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படம் டிச. 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. *ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் ‘4th Floor’ படம் பிப்ரவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. *வடிவுக்கரசி நடித்த “க்ராணி” படத்தின் டிரெய்லர் வெளியானது.
News January 25, 2026
தேர்தல் அறிவித்த பிறகுதான் எல்லாம் முடிவாகும்: வைகோ

தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் ஓரவஞ்சகம் செய்த PM மோடி, நேற்று வெறும் பொய்களை மட்டும் அவிழ்த்துவிட்டு சென்றதாக வைகோ விமர்சித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகுதான், எத்தனை தொகுதியில் போட்டி, தனிச் சின்னத்தில் போட்டியா என்பதெல்லாம் என்பது குறித்து முடிவுசெய்யப்படும். அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது எனக் கூறிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.


