News August 8, 2024
பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (2/4)

இதைத் தொடர்ந்து GIVEN NAME என்ற இடத்தில் உங்களின் பெயரையும், SURNAME என்ற இடத்தில் குடும்பப் பெயரையும் , DATE OF BIRTH பகுதியில் பிறந்த தேதியையும் பதிவிட வேண்டும். பின்னர் உங்களது இமெயில் ஐடியைப் பதிவிட்டு இதே இமெயில் ஐடியை உங்களது லாகின் ஐடியாக வைத்துக்கொள்ள விரும்பினால் அதையே தேர்ந்தெடுக்கலாம். அதற்கு DO YOU WANT YOUR LOGIN ID TO BE SAME AS EMAIL ID என்பதில் YES அல்லது NO கொடுக்கவும்.
Similar News
News July 11, 2025
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்று மதத்தினர் 1,000 பேர் வேலை பார்ப்பதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மதம் மற்றும் சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லாதோர் எப்படி திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியலாம் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News July 11, 2025
திருமணத்திற்கு 1 மாதம் முன் கேன்சர்… விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் தனது முதல் மனைவி ரஜினி நட்ராஜ் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். திருமணம் ஆகுவதற்கு 1 மாதம் முன்பே அவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்தும் திருமணம் செய்ததாக கூறினார். சினிமாவில் கவனம் செலுத்தியதால், அக்கறை குறைவதாக ரஜினி நினைக்க, அது விவாகரத்தில் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் பார்த்துக்கொள்வேன் என உறுதியளித்ததால், இன்று வரை அவருடன் பழகி வருவதாகவும் தெரிவித்தார்.
News July 11, 2025
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.