News August 8, 2024
பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (2/4)

இதைத் தொடர்ந்து GIVEN NAME என்ற இடத்தில் உங்களின் பெயரையும், SURNAME என்ற இடத்தில் குடும்பப் பெயரையும் , DATE OF BIRTH பகுதியில் பிறந்த தேதியையும் பதிவிட வேண்டும். பின்னர் உங்களது இமெயில் ஐடியைப் பதிவிட்டு இதே இமெயில் ஐடியை உங்களது லாகின் ஐடியாக வைத்துக்கொள்ள விரும்பினால் அதையே தேர்ந்தெடுக்கலாம். அதற்கு DO YOU WANT YOUR LOGIN ID TO BE SAME AS EMAIL ID என்பதில் YES அல்லது NO கொடுக்கவும்.
Similar News
News November 25, 2025
600 முறை மரணத்தை ஏமாற்றிய லெஜண்ட் காஸ்ட்ரோ!

கியூப புரட்சியாளரும், முன்னாள் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைந்த நாள் இன்று. அவரை கொல்ல அமெரிக்கா 600 முறை முயற்சித்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். ஆனால் அந்த 600 சதி திட்டங்களையும் தகர்த்தெறிந்து 90 வயது வரை வாழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016-ம் ஆண்டு நவ.25-ம் தேதி வயது மூப்பின் காரணமாகவே அவர் காலமானார். இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஐகான்களில் ஒருவராக திகழ்கிறார்.
News November 25, 2025
இதுதான் ராமர் கோயிலில் ஏற்றப்படும் கொடி!

அயோத்தி ராமர் கோயிலில் PM மோடி ஏற்றி வைக்கும் கொடியின் முதல்கட்ட படங்கள் வெளியாகி உள்ளன. செங்கோண முக்கோண வடிவில் 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியானது ராமரின் சக்தியையும், வீரத்தையும் குறிக்கும் வகையில், சூரியனின் உருவத்தை கொண்டுள்ளது. மேலும், ‘ஓம்’ மற்றும் கோவிதர் மரமும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் ராமதாஸ்

2026 தேர்தல் கூட்டணி குறித்து டிச.30-ல் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகள் காந்திமதி உள்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே பாமகவை ஒன்றிணைத்து கூட்டணியில் சேர்க்க பாஜக முற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ராமதாஸும் NDA கூட்டணியையே தேர்ந்தெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


