News April 25, 2025
ராசி பலன்கள் (25.04.2025)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – நோய் ➤கன்னி – துன்பம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அமைதி ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – தடங்கல்.
Similar News
News April 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
News April 25, 2025
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
News April 25, 2025
பேராசிரியரால் பாலியல் வன்கொடுமை… மாணவி பலி

சென்னை கேளம்பாக்கம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மாணவி உயிரிழந்தார். உதவி பேராசியர் ராஜேஷ்குமரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்.