News April 25, 2025
ராசி பலன்கள் (25.04.2025)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – நோய் ➤கன்னி – துன்பம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அமைதி ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – தடங்கல்.
Similar News
News November 11, 2025
பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.
News November 11, 2025
பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
News November 11, 2025
ரஷித் கானுக்கு 2-வது திருமணம்?

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆக.20-ம் தேதி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்தது போல அன்பு, அமைதியை உருவகப்படுத்தும் வகையில் தன் மனைவி திகழ்வதாக கூறியுள்ளார். ரஷித் கான் கடந்த ஆண்டு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


