News April 26, 2025
ஹாலிவுட் பிரபலம் அம்பர் கெல்லெஹெர் காலமானார்!

ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை அம்பர் கெல்லெஹெர்(56) காலமானார். இவர் சினைப்பை புற்றுநோயால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளன. பிரபல சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ள இவர், அமெரிக்காவின் மிகப்பெரிய மேட்ரிமோனி நிறுவனமான Kelleher International-ன் CEO ஆவார். நம்மூர் கல்யாணமாலை போன்று நிகழ்ச்சிகளையும் ஹாலிவுட்டில் இவர் நடத்தி இருக்கிறார்.#RIP.
Similar News
News November 25, 2025
நவம்பர் 25: வரலாற்றில் இன்று

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.
News November 25, 2025
மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.
News November 25, 2025
தூத்துக்குடியில் குவியும் பறவைகள் PHOTOS

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளன. இந்த வருடம் ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன், பூச்சிகள் உள்ளிட்ட இரைகளுக்காக குவிந்துள்ளன. இது ஈரநிலங்களில் சுற்றுச்சுழல் மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலே, பறவைகளில் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


