News April 26, 2025
ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
Similar News
News July 9, 2025
சுதந்திரத்துக்கு முன்பே இந்தியா – நமீபியா உறவு

1885-ன் பிற்பகுதியில் ஜெர்மனியின் காலனியாக இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்காவை, தென்னாப்பிரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 1990-ல் சுதந்திரம் பெற்று ‘நமீபியா’ என அங்கீகாரம் பெற்றது. இதற்கான UN வாக்கெடுப்பில் இந்தியா தனது ஆதரவை தெரிவித்தது. தற்போது 28 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்வதை இந்தியா கையில் எடுத்துள்ளது. அங்கு கடும் வறட்சியும் உள்ளது.
News July 9, 2025
ஆஸி., லெஜெண்ட் பவுலர் காலமானார்

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் கார்டன் ரோர்க்கி (87) காலமானார். 1959-ல் விளையாட தொடங்கிய இவர், தன் ஆக்ரோஷ பவுலிங் ஆக்ஷனால் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால், இந்தியா டூரின் போது இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்க, இவரது சர்வதேச கரியர் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News July 9, 2025
மாமியாரே என் துணிகளை துவைக்கிறார்: Priyanka Chopra

துணி துவைப்பது எப்படி என்று தனது மாமியாரே கற்றுக் கொடுத்ததாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஆனாலும் அவரே தனது துணிகளை துவைப்பதாகவும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், துணிகளை மடித்து அயர்ன் செய்வது எளிதானது என்றாலும், அவற்றை துவைப்பது என்பது சற்று கடினமான வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் துணிகளை எப்போது நீங்களே துவைக்க தொடங்கினீர்கள்? (அ) துவைக்கப் போகிறீர்கள்?