News April 26, 2025
ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
இருளில் மின்னும் 9 இடங்கள் PHOTOS

மின்மினிப் பூச்சிகள், பயோலுமினசென்ட் காளான்கள் & பூஞ்சைகள் உள்ளிட்டவையால் காடுகளும், பிளாங்க்டன் போன்ற சிறிய உயிரினங்கள் வெளிப்படுத்தும் பயோலுமினசென்ட் கெமிக்கலால் கடற்கரைகளும் மின்னுகின்றன. இதுபோன்று இந்தியாவில், எந்த பகுதி எல்லாம் இரவில் மின்னுகின்றன என்பதனை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 27, 2025
நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. நாளை மறுநாள்(நவ.28) ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
₹7,280 கோடிக்கு சூப்பர் திட்டம்.. இனி சீனாவை நம்ப வேண்டாம்

அரிய வகை கனிமங்களை காந்தங்களாக மாற்றும் ₹7,280 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. EV வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பிற்கு இந்த காந்தங்கள் இன்றியமையாததாக உள்ளன. இந்த காந்த உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே, சீனாவை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் காந்தங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.


