News April 10, 2025
ஹாலிவுட் நடிகர் மெல் நோவாக் காலமானார்!

பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் மெல் நோவாக் (93) வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர், புரூஸ் லீயுடன் ‘Game of Death’ படத்திலும், ‘Eye for an eye’, ‘Black Belt Jones’ போன்ற ஆக்ஷன் படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இவரின் மறைவு செய்தியை அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
குஜராத் பாலம் விபத்து: PM மோடி இரங்கல்

குஜராத்தில் <<17003795>>பாலம் இடிந்து விழுந்த விபத்தில்<<>> உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
முடி கொட்டுதா? இந்த பிரச்னையாகவும் இருக்கலாம்…

இன்றைய தலைமுறையினருக்கு பெரிய பிரச்னையே முடி உதிர்வுதான். என்ன பண்ணாலும் முடி கொட்டுவது நிற்பதில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். அது மரபியல், ஹார்மோன் பிரச்னைகளையும் சார்ந்தது என்றாலும், சிலரின் Lifestyle-ம் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.